×

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில்  நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்டம், செயான் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசாரும், ராணுவத்தினரும் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹைதர் என்பதும், மற்றொருவன் உள்ளூரை சேர்ந்தவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார் டிவிட்டர் பதிவில், ‘சுட்டு கொல்லப்பட்ட ஹைதர் வடக்கு காஷ்மீரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றச் செயல்களில்  ஈடுபட்டு வந்தான்,’ என்று  தெரிவித்துள்ளார்.

Tags : Kashmir , 2 militants shot dead in Kashmir
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...