சர்தாம் புனித யாத்திரை பத்ரிநாத் கோயில் நடை திறப்பு

டேராடூன்: வேத பாசுரங்கள் முழங்க பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்டில் அமைந்துள்ள புண்ணிய தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு செல்லும் யாத்திரை ‘சர்தாம் யாத்திரை’ எனப்படுகிறது. குளிர்காலத்தில் மூடப்படும் இக்கோயில்கள் 6 மாதத்திற்குப் பிறகு கோடையில் திறக்கப்படும். இதன்படி, கடந்த 3ம் தேதி கங்கோத்திரி, யமுனோத்ரி கோயில்களும், கடந்த 6ம் தேதி கேதார்நாத் கோயிலும் திறக்கப்பட்டன. இந்நிலையில், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை நேற்று காலை 6.15 மணிக்கு திறக்கப்பட்டது. பகவான் விஷ்ணு அருள்பாலிக்கும் இக்கோயிலில் வேத பாசுரங்கள் முழங்க நடை திறக்கப்படுவதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நடை திறப்பை முன்னிட்டு கோயில் முழுவதும் சாமந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதன் மூலம் சர்தாம் புனித யாத்திரை முழுமையாக தொடங்கி உள்ளது. 

Related Stories: