×

26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி 52 வயது நேபாளி சாதனை

காத்மாண்டு: உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 26வது முறையாக ஏறி நேபாளத்தை சேர்ந்த கமி ரிடா புதிய சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்திற்கு பேர் போன நேபாளத்தின் ஷெர்பா இனத்தை சேர்ந்தவர்களே, மலையேறுபவர்களை வழிநடத்திச் செல்கின்றனர். அந்த வகையில், 11 ஷெர்பா வழிகாட்டிகளுடன் தனது குழுவை வழிநடத்திச் சென்ற பிரபல நேபாள ஷெர்பா கமி ரிடா எவரெஸ்ட்டின் 8,848.86 மீட்டர் உயரத்தை தொட்டுள்ளார். 52 வயதாகும் இவர் எவரெஸ்ட் சிகரத்தை தொடுவது இது 26வது முறை. இதன் மூலம் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்துள்ளார். கமி ரிடா கடந்த 1994ம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார். அதிகம் முறை எவரெஸ்டின் 8000 மீட்டர் உயரத்தை தொட்டவரும் இவர்தான். இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை தொடும் முயற்சியில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nepali ,Everest , 52-year-old Nepali climbs Everest for the 26th time
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...