தாழையம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ துர்க்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

வாலாஜாபாத்:  காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட தாழையம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட தாழையம்பட்டு கிராமத்தில் துர்க்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது .இக்கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரசன்ன வெங்கடாஜலபதி, விநாயகர், நவக்கிரகங்கள், சாய்பாபா ஆகிய சன்னதிகள் புதியதாக கட்டப்பட்டு  உள்ளன.

இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ராமாபுரம் தி.பரமசிவ சிவாச்சாரியார் தலைமையிலும், ஆலய அர்ச்சகர் எஸ்.ஹரிஹர குருக்கள் முன்னிலையிலும் சனிக்கிழமை தொடங்கின. விக்னேசுவர பூஜை,கோ.பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து புனித நீர்க்குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் துர்க்கையம்மனுக்கும்  பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானமும்,கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழா வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ,காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக்குழுவின் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பி.,சேகர், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடிசெல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, பேரூர் செயலாளர் பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன், வாலாஜாபாத் விவசாய உணவக உரிமையாளர்கள் வினோத்குமார், பிரிதிவிராஜ் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: