காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-வது பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியில் 24-பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காஞ்சிஸ்ரீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளைநிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கௌரி கொண்டு பேசியதாவது ‘‘மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் பட்டங்கள் வாழ்க்கையின் நுழைவாயில். அதை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கும் உதவிகரமாக இருந்து இந்த சமூகத்துக்கு நீங்கள் பயன் பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.  

தொடர்ந்து 646 மாணவர்களுக்கு பட்டங்களை அளித்ததோடு மட்டுமின்றி பல்கலைக்கழக அளவில் 6-வது மதிப்பெண் பெற்ற இளங்கலை ஆங்கிலத்துறை மாணவி எம்.தனுஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர். சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையைச் சார்ந்த இயக்குநர் பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். முன்னதாக அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: