திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையை முதன்மை செயலர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று 3340 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமை அரசு முதன்மை செயலர் இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி டீன் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: