சாலை விபத்தில் பலியான போக்குவரத்து தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி: போலீஸ் எஸ்பி வருண்குமார் வழங்கினார்

திருவள்ளூர்: திருத்தணியில் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 6.3.2022 அன்று பணியின்போது அரக்கோணம் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

எனவே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் சக காவலர்களிடம் கட்செவி மூலம் கோரப்பட்டது. எனவே இவரோடு 1999ல் பேட்ஜ் காவலர்கள் உதவும் உறவு சார்பில் 38 மாவட்டங்களில் 2760 காவலர்களில் 1999 பேர் தானாக முன்வந்து ரூ.13 லட்சத்து 97 ஆயிரத்து 750 பங்களிப்பு செய்தனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட காவலர்கள் சார்பில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 540 பங்களிப்பு வழங்கினர். போலீஸ் எஸ்பி வருண்குமார் காவலரின் குடும்பத்தினரிடம் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 290க்கான காசோலையை வழங்கினார்.

Related Stories: