அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரை அறுவை சிகிச்சை முன்னேற்ற கருத்தரங்கு: கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 1,000 பேர் பங்கேற்பு

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷனால் விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த 13வது ரெட்டிகான் கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழிப்படிக -  விழித்திரை கோளாறுகளை கண்டறிவதிலும் மற்றும் அதற்கான சிகிச்சை மேலாண்மையிலும் நிகழ்ந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1000த்திற்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அமைச்சர் கீதா ஜீவன், குத்து விளக்கை ஏற்றி வைத்து இக்கருத்தரங்கு நிகழ்வை தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் மற்றும் அதன் செயலாக்க இயக்குநர் மற்றும் மருத்துவ சேவைகள் துறையின் தலைவர், அஸ்வின் அகர்வால் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் கூறியதாவது: ‘விழிப்படிக - விழித்திரை அறுவை சிகிச்சையில் சமீபத்திய புத்தாக்க முன்னேற்றங்கள் பற்றி அறிந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000த்திற்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற ரெட்டிகான் கருத்தரங்கின் 12-வது பதிப்பு மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. விழித்திரை நோய்கள், அவைகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சை தொடர்பாக மருந்துவ உலகில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்கள் அதிக பயனுள்ளதாகவும் மற்றும் அனைவரும் பெற்று பயனடையக்கூடியதாகவும் ஆகி வருகின்றன.

எனினும், விழித்திரை கண் மருந்துவவியலில் திறன்மிக்க நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறையால் இந்தியா பெரிதும் அவதியுறுகிறது. மருத்துவ சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்காக எட்டப்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்கங்கள், புதுமையான உத்திகளை, அனைத்து விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும் கிடைக்குமாறு செய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்புவதே ரெட்டிகான் கருத்தரங்கின் நோக்கமாகும்.

40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அவர்களது பார்வைத்திறனை பரிசோதிக்க எளிய பரிசோதனைகளை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு (சர்க்கரை நோய்) இருக்கும் அனைத்து நபர்களும் அவர்களது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பது அவசியம். விழித்திரையில் ஏற்படுகிற ஆரம்ப நிலை மாற்றங்களை கண்டறிவதற்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் விழித்திரை பரிசோதனை மெற்கொள்வது அத்தியாவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: