துரைப்பாக்கம் பகுதியில் குடிநீர் விநியோகம் 11ம் தேதி நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பகுதி 15க்கு உட்பட்ட, ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி பகுதியில் நடைமேம்பாலம் அருகில் ஒஎம்ஆர் சாலையில் 500 மி.மீ. விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  

இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 12ம் தேதி காலை 10 மணி முதல் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள 8144930914 என்ற எண்ணில் பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் பகுதியினர் தொடர்பு கொள்ளலாம். மேலும் 8144930915 என்ற எண்ணில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: