ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது: ராகுல் காந்தி பேச்சு

ஐதராபாத்; தெலங்கானா மாநிலத்தில் 2024-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்களை அழைக்கிறேன். தெலுங்கானா மக்கள் மற்றும் சோனியாவின் கனவுகளை சந்திரசேகர ராவ் என்ற தனி நபர் மட்டுமே அழித்து விட்டார்.

2014-ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டரின் விலை ரூ.410 ஆகவும் மானியம் ரூ.827ஆகவும் இருந்தது. தற்போது பாஜக ஆட்சியில் சிலிண்டரின் விலை ரூ.999ஆகவும் மானியமாக ஒரு ரூபாய் கூட வழங்கப்படுவதில்லை. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்காக காங்கிரஸ் கட்சி பொருளாதார கொள்கைகளை வகுத்தது இவ்வாறு கூறினார்.

Related Stories: