டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அச்சுறுத்தல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையின் காரணமாக, அந்த தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டெல்லியில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்தாண்டு ஜனவரியில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே குறைந்த திறன் கொண்ட கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அதன் பிறகு இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: