கருமாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பறவைகாவடி ஊர்வலம்

பந்தலூர்: பந்தலூர் அம்பேத்கர் நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழாவில் பக்தர்களின்  பறவைகாவடி ஊர்வலம் நடைபெற்றது. பந்தலூர் அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம்  காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கொடியேற்றுதல் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நேற்று காலை செண்டை மேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு  அபிசேக ஆராதனைகளும், மதியம் கங்கைக்கு சென்று பக்தர்களின் பால்குடம் மற்றும் பறவைகாவடி ஊர்வலம் பந்தலூர் பஜார் வழியாக ஊர்வலமாக வந்து  கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள்,மாவிளக்கு பூஜைகள்,இரவு அம்மன் திருத்தேர் ஊர்வலம்  நடைப்பெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: