மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; மகளிர் ஒற்றையரில் ஓன்ஸ் ஜபீர் சாம்பியன்: ஆடவர் அரையிறுதியில் ஜோகோவிச் தோல்வி

மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில்  27 வயதான துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர், 28 வயதான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் முதல்செட்டை 7-0 என ஜபீர் கைப்பற்றினார். 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா 6-0 என வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். 3வது செட்டில் அதிரடி காட்டிய ஜபீர் 6-2 என கைப்பற்றினார். 1 மணி 54 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில்முடிவில் 7-5, 0-6, 6-2 என ஜபீர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 7-6, 5-7, 6-7 என 7ம் நிலை வீரரான ஸ்பெயினின் 19 வயது கார்லஸ் அல்காரசிடம் தோல்வி அடைந்தார். இன்று அதிகாலை நடந்த மற்றொரு அரையிறுதியில் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 6-4, 3-6, 6-2 என  கிரீஸ் நாட்டின்  சிட்சிபாசை வீழ்த்தினார். இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் பைனலில்  கார்லஸ் அல்காரஸ்-ஸ்வெரேவ் மோதுகின்றனர்.

Related Stories: