துரோகிகளை வீழ்த்தி புதிய பாகிஸ்தான் அமைய தொடர்ந்து பணியாற்றுவேன்: இம்ரான் கான் உறுதி

இஸ்லாமாபாத்: அமெரிக்க ராணுவ முகாம்களை பாகிஸ்தானில் அனுமதிக்க மறுத்ததே தான் பிரதமர் பதவியை இழக்க முக்கிய காரணம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலத்தை இழந்ததால் அண்மையில் ஆட்சியை பறிகொடுத்த அவர் அமெரிக்கா மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை கூறிவருகிறார்.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கா பாகிஸ்தானில் முகாம்களை அமைத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறியுள்ளார். இதற்கு தான் அனுமதி மறுத்ததாக அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் சிக்கி பாகிஸ்தானில் மட்டும் 80 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

சீனாவுடன் நல்லுறவு மற்றும் ரஷ்யாவிற்கு தான் மேற்கொண்ட பயணம் போன்றவை அமெரிக்காவை கோபமடைய செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். துரோகிகளை வீழ்த்தி புதிய பாகிஸ்தான் அமைய தொடர்ந்து பணியாற்றுவேன் என்று இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். வரும் 20-ம் தேதி பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.             

Related Stories: