×

ஆப்கானில் தலிபான்கள் அதிரடி பொது இடங்களில் புர்கா கட்டாயம்: தலை முதல் கால் வரை மூட வேண்டும்

காபூல்: பொது இடங்களில்  புர்கா  உடை அணிந்து வர வேண்டும் என்று ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க கூட்டு படைகள்  வெளியேறியதையடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு பெண் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆனால் இம்முறை பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என ஆரம்பத்தில் தலிபான்கள் கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக தங்களின் பழைய கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விதித்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன், 6ம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானில் பெண்கள் பொது இடங்களில் தலையையும் உடம்பையும் முழுமையாக மறைக்கும் புர்கா உடை அணிய வேண்டும். பெண்கள் தங்களுடைய கண்களை தவிர்த்து முகத்தையும் மறைத்து கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால்தான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுன்ஸாடா நிருபர்களுக்கு நேற்று பேட்டியளிக்கையில், ‘‘எங்கள் சகோதரிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவே பொது இடங்களில் கட்டாயம் அவர்கள் ஹிஜாப் அணிய வேண்டும். ஹிஜாப் என்பது தலை முதல் காலை வரை மறைக்கக் கூடிய புர்காவாக இருப்பதே சிறந்தது. இந்த ஆணையை மீறி பெண்கள் யாராவது பொது இடத்தில் தங்கள் முகத்தை மறைக்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய தந்தை அல்லது நெருங்கிய உறவினருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.

Tags : Taliban ,Afghanistan , The burqa is mandatory in public places where the Taliban are active in Afghanistan: from head to toe
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை