×

கேஜிஎஃப் 2 நடிகர் திடீர் மரணம்

பெங்களூரு: பிபரல நடிகர் மோகன் ஜுனேஜா (54), கல்லீரல் பிரச்னை காரணமாக நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடத்தில்  நடித்துள்ள அவர், கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்தவர். கடந்த 2008ல் ‘சங்கமா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். பிறகு கன்னடம் மற்றும் தமிழில் தயாரான ‘டாக்சி டிரைவர் நம்பர் 1’ என்ற படத்தில் நடித்தார். யஷ் நடிப்பில் வெளியான ‘கேஜிஎஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்னை இருந்ததால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென்று அவர் மரணம் அடைந்தார். நேற்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

Tags : Sudden death of KGF2 actor
× RELATED எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக்...