தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: கலெக்டர், எம்பி வெளியிட்டனர்

காஞ்சிபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட சாதனை மலரை கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டினல், பல்வேறு துறைகளில் அரும்பணிகள் சிறப்பாக நடந்துள்ளன. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு சார்பில் முடிக்கப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகம் தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மாவட்டத்தில் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற சாதனை மலர் வெளியீட்டு விழா காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம் ஆகியோர், ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், மாநகராட்சி ஆணையர் நாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில், தமிழக ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற தலைப்பில் அரசின் ஓராண்டு சாதனை மலரை, கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரி கிராமத்தில் உள்ள இருளர் மற்றும் நரி குறவர் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கினார். வண்டலூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து, அதில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. என்றார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் காமராஜ், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் கார்த்திக், மறைமலைநகர் நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலகண்ணன். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன்,  மறைமலைநகர் நகராட்சி ஆணையர்  லட்சுமி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: