பாம்பன் பாலத்தில் டூவீலர் மீது கார் மோதி முதியவர் பலி: கடலில் தூக்கி வீசப்பட்டதால் உடன் வந்தவர் தப்பினார்

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் வந்தவர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டதால் உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூர் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி (56), குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பாம்பன் பாலத்தில் வேகமாக சென்ற கார் எதிரில் வந்த டூவீலர் மீது மோதி, நடைபைாதயில் ஏறி நின்றது. கார் மோதிய வேகத்தில் டூவீலரில் இருந்த மண்டபத்தை சேர்ந்த முகேஷ் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். இவருடன் வந்த நாராயணன் (60) பலத்த படுகாயமடைந்தார். கடலில் விழுந்து மூழ்கிய முகேசை, மீனவர்களின் உதவியுடன் பாம்பன் போலீசார் மீட்டனர்.  பின்னர் படுகாயமடைந்த நாராயணன், முகேஷ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் உயிரிழந்தார்.

Related Stories: