கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நேற்று காலை 500 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் வந்தன. இதனால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ரூ.60க்கும், கேரட் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், கத்தரிக்காய் ரூ.40க்கும், ரூ.சவ்சவ் 30க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், அவரைக்காய் ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.20ல் இருந்து ரூ.30க்கும், கோஸ் ரூ.20ல் இருந்து ரூ.30க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை காய்கறிகள் விலை குறைந்துள்ளது. ஒருகிலோ பெங்களூரூ தக்காளி ரூ.45க்கும், நாட்டு தக்காளி ரூ.40க்கும், கேரட் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், கத்திரிக்காய் ரூ.25க்கும், பீன்ஸ் ரூ.40க்கும், சவ்சவ் ரூ.25க்கும் கோஸ் ரூ.20க்கும் அவரைக்காய் ரூ.40க்கும் விற்கப்படடகது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இன்னும் ஒரு வாரம் காய்கறிகளின் விலைகளில் ஏற்ற, தாழ்வு காணப்படும்’’ என்றார்.

Related Stories: