தொண்டர்களை அதிமுக தலைவர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல: திருச்செந்தூரில் சசிகலா பேட்டி

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு இன்று அதிகாலையில் சசிகலா வந்தார். கையில் வெள்ளி வேலினை எடுத்துச் சென்ற அவர், அங்கு உண்டியலில் அதை செலுத்தினார். பின்னர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சசிகலா அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள்.

அவர்களை தலைவர்கள் புறக்கணிப்பது, கட்சிக்கு நல்லதல்ல. நான் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்ததோ, அது போன்று எனது ஆட்சி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: