பெரியகுளம் அருகே மின்கம்பங்களை உடனே சீரமைத்து தர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமக்காபட்டி, அம்சாபுரம் மற்றும் மஞ்சளாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறாவளிக் காற்றால் அந்த பகுதியில் வாழைமரங்கள், தென்னைமரங்கள் முறிந்து சேதமடைந்தன. மேலும் விளை நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகளில் தென்னை மரங்கள் விழுந்ததால் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் விளை நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் முறை தடைபட்டுள்ளது. எனவே விவசாய விளைநிலங்களில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை உடனே சீரமைத்து தர வேண்டும் என மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: