சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

பேட்டை: நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, ஜீவா நகரைச் சேர்ந்த சேகர் மகன் மாரியப்பன் (17). இவர் இதற்கு முன்பு தீன் நகரில் குடியிருந்து வந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் நட்பு ரீதியாக பழகியுள்ளார். நேற்று திடீரென்று அந்த சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தீன்குமார் விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்து, நாங்குநேரி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தார்.

Related Stories: