மலேசிய இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய நெல்லை வாலிபர் கைது

நெல்லை,: மலேசியாவை சேர்ந்த இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய நெல்லை இன்ஜினியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவை சேர்ந்த சுப்பையா மகள் கவிதா (33). பி.இ. பட்டதாரியான இவருக்கும் நெல்ைல டவுனைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி இம்ரான் (29) என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இம்ரான் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அதன் பிறகும் அவர் கவிதாவுடன் தொடர்பில் இருந்தார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் கவிதாவை, தன் சொந்த ஊரான நெல்லைக்கு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துள்ளார். அதன்பேரில் கவிதாவும், அவரது பெற்றோரும் நெல்லைக்கு வந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கோயிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணம் நடந்த சில நாட்களில் தம்பதியினர் மலேசியாவிற்கு சென்றனர். பின்னர் மீண்டும் துபாய்க்கு இம்ரான் வேலைக்கு சென்றார். நாளடைவில் இம்ரான், கவிதாவிடம் செல்போனில் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

சந்தேகமடைந்த கவிதா, இம்ரானிடம் செல்போனில் பேசியபோது மலேசியாவிலிருந்து நெல்லை டவுனுக்கு வந்து விட வேண்டும். மேலும் தனது குடும்பத்தாருடன் வசிக்க வேண்டுமென கூறி மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே கவிதா 6 மாத கர்ப்பிணி ஆனார். இம்ரானின் நடவடிக்கைகள் குறித்து கவிதா, துபாயிலுள்ள போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். இதனால் துபாயிலிருந்த இம்ரான் நெல்லைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திரும்பி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும் அவர், கவிதாவை புறக்கணித்து மிரட்டினாராம்.

இதுகுறித்து கவிதா மற்றும் அவரது பெற்றோர் நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சங்கரிடம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இம்ரான் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். பின்னர் இம்ரானை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: