ஆணைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும்

வாழப்பாடி: ஆணைமடுவு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு ஆற்றுப்பகுதிக்கு நேற்று பாசனத்துக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 ஆயிரம்  ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புளுதிகுட்டை ஆணைமடுவு நீர்த்தேக்கம் 67 அடி உயரமுள்ளது. இந்த அணையில் தற்போது, 63 அடி அளவிற்கு (223.81 மில்லியன் கனஅடி) நீர் இருப்பில் உள்ளது.

இந்நிலையில் ஆணைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து, பழைய ஆயக்கட்டு ஆற்றுப்பகுதிக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 8 மணியளவில் ஆணைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து, விநாடிக்கு 60 கனஅடி வீதம் பழைய ஆயக்கட்டு ஆற்றுப்பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 22 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். ஆத்தூர் உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, செயற் பொறியாளர் ஆனந்தன், ஆனைமடுவு உதவி பொறியாளர் விஜயராகவன், கொட்டவாடி முன்னாள் தலைவர் குமார் ஆகியோர் பாசனத்திற்கு நீரை திறந்து வைத்தனர். அணையில் இருந்து 113.96 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இந்த நீர்திறப்பால் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: