8 ஆண்டுகளாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஜூன் 9ம் தேதி திருப்பதியில் டும் டும் டும்!!

சென்னை : நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் அடுத்த மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நானும் ரவுடிதான், காத்து வாக்குல இரண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சுமார் 8 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியான நிலையில், அதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்துவந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 9ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக திருப்பதியில் திருமண ஏற்பாடுகளை இருவரும் பார்வையிட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Related Stories: