×

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை; தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்; ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு!!

சென்னை : திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். .கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  இதையடுத்து முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி ஸ்டாலின்  பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தலைமைச் செயலக வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  அதில் முதல்வராய் ஓராண்டு;  முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் மு.க,ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக முதல்வர் வெளியிட்டார்.

Tags : Anna ,BCE ,K. Stalin , Anna, Artist, Chief, MK Stalin, Honor, Achievement, Book
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்