சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பென் நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (62). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் செக்காலை பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து விட்டு மீண்டும் பென் நகர் சென்றுள்ளார்.

காரைக்குடி புதிய பஸ்நிலையம் தேவர் சிலை அருகே வந்தபோது கார் பேட்டரியில் லேசாக புகை வந்துள்ளது. குப்புசாமி உடனே இறங்கி பார்த்துள்ளார். திடீரென அதிகளவில் புகை வந்ததால் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உள்ளனர். சிறிது நேரத்தில் பேட்டரியில் இருந்த தீ வேகமாக கார் முழுவதும் பரவி முற்றிலும் எரிந்துள்ளது. இதனை கண்டு காரில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  தீயணைப்பு துறையினர் விரைந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

Related Stories: