சமூகநீதி கண்காணிப்பு குழுவுக்கான புதிய அலுவலகம் திறப்பு

சென்னை:  தமிழக முதல்வர் கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல்கள் முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சமூகநீதிக் கண்காணிப்பு குழு ஒன்றை வீரபாண்டியன் தலைமையில் அமைத்து உத்தரவிட்டார். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான கட்டிடத்தில், 2243 சதுர அடி பரப்பளவுடைய அறையில் சமூக நீதிக் கண்காணிப்பு குழுவிற்கான புதிய அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று காலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், சமூக நீதிக் கண்காணிப்பு குழுவின் தலைவர் வீரபாண்டியன், உறுப்பினர்கள் தனவேல், சுவாமிநாதன் தேவதாஸ், மனுஷ்யபுத்திரன், ஜெய்சன், ராஜேந்திரன், கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் மற்றும் சமூக சீர்திருத்தத்துறையின் முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மங்கத் ராம் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: