மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு பரிசு தொகுப்பு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுதொகுப்பு வழங்கி வாழ்த்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி தங்கபேச்சி மற்றும் குன்றத்தூரில் உள்ள மாதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிடிஎஸ் பல்மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி புவனேஸ்வரி ஆகிய மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: