×

சிந்துவின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம், கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.

விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்’ என தெரிவித்துள்ளார்.



Tags : Government ,Sindh ,Chief Minister , Sindhu's medical expenses Government will accept: Chief Minister's announcement
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்