சென்னை அருகே ஜவுளிப்பூங்கா 200 கோடி வழங்க வேண்டும்.: தமிழக அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி

புதுடெல்லி: டெல்லிக்கு அரசு முறை பயணமாக சென்ற தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும், நிதி தேவை குறித்தும் நேற்று பேசினார்.

இதையடுத்து, அவர் அளித்த பேட்டியில், ‘‘ தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி மற்றும் விசைத் தறியால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவது தொடர்பு ஆய்வு நடத்த வேண்டும். அதற்காக ₹15 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, தமிழகத்தில் சென்னைக்கு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஜவுளி நகரத்துக்கான  கட்டமைப்புகளுக்கு ₹200 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: