மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பைனலில் ஆன்ஸ் ஜெபர் ஜெசிகா பெகுலா மோதல்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில்  துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதுகிறார்.அரையிறுதியில் ரஷ்ய வீராங்கனை ஏகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் (27 வயது, 45வது ரேங்க்) மோதிய   ஜெபர் ( 27வயது, 10வது ரேங்க்) 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 1 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

 மற்றொரு அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் தெய்க்மனுடன் (24 வயது, 35வது ரேங்க்)   மோதிய பெகுலா (28 வயது, 14வது ரேங்க்) 6-3, 6-4 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது.இன்று மாலை நடைபெறும் பைனலில்  ஆன்ஸ் - ஜெசிகா மோதுகின்றனர்.

Related Stories: