கேதர்நாத் கோயில் நடை திறப்பு

டேராடூன்:  ஆறு மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கான திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி குளிர்காலம் தொடங்கியதை அடுத்து உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பின், கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில், பிரதமர் மோடி சார்பாக உலக மக்கள் அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டி ருத்ராபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.25 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த 3ம் தேதி அக்‌ஷய திருதியையன்று கங்கோத்ரி, யமுனோத்திரி கோயில்கள் திறக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான சர்தாம் எனப்படும் புனித யாத்திரை தொடங்கியது. இதன் ஒரு கட்டமாக, கேதார்நாத் கோயிலும் நேற்று திறக்கப்பட்டது. பத்ரிநாத் கோயில் நாளை திறக்கப்படுகிறது.

Related Stories: