சான்றிதழ் கட்டணம் உயர்வு:அண்ணா பல்கலைகழகம்

சென்னை: கிரேடு மதிப்பெண் சான்றிதழ் காணாமல் போனால் புதிய சான்று பெற கட்டணம் ரூ.300லிருந்து, ரூ 3500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு சான்றிதழ் காணாமல் போனால் புதிய சான்று பெற கட்டணம் ரூ.3000லிருந்து, ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . 2ஆம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ 10,000 நிர்ணயம் அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது. கடந்த 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: