×

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி - அரசு அறிவிப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுத்தேர்வை சந்திக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் மக்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பகேல், சத்தீஸ்கர் மாநிலத்தில் வரப்போகும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசாக ஹெலிகாப்டர் சவாரி காத்திருக்கிறது. மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கும் ஹெலிக்காப்டர் சவாரி செய்ய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.

மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வானத்தில் பறக்க வேண்டும் என்பதை அனைவரும் ஆசையோடு விரும்புவார்கள். இந்த பயணத்தின் மூலம் குழந்தைகள் மன மகிழ்ச்சி அடைந்து தாங்கள் எப்போதும் உயரப் பறக்க வேண்டும். லட்சியங்களை அடைவதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். மாணவர்கள் இவ்வாறு தனித்துவமான பரிசுகளை பெரும்போது அவர்களுக்கு நிச்சயம் உத்வேகம் பிறக்கும் என்றார்.


Tags : Public Service ,Govt , Chhattisgarh government announces, free helicopter ride students
× RELATED 2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ்...