திருப்பதி பண்ணை வீட்டில் கல்லூரி மாணவி மர்மச்சாவு: போலீஸ் விசாரணை

.திருப்பதி: திருப்பதி அருகே விவசாய பண்ணை நிலத்தில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சத்யசாய் மாவட்டம் கொரண்டலாவைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (20) திருப்பதியில் தங்கி பி.ஃபார்ம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மல்லாப்பள்ளி கிராமத்தில் சாதிக் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான விவசாய பண்ணை வீட்டில் தேஜஸ்வினி மார்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மாணவி தேஜஸ்வினியை சாதிக் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சாதிக்கின் பண்ணை வீட்டில் மர்மமாக உயிரிழந்து கிடந்த தேஜஸ்வினியின் உடலை போலீசார் மீட்டு உடற்கூராயவுக்கு அனுப்பினர்.  தேஜஸ்வினியை கடத்தி கூட்டு பாலியல் வன்முறை செய்து கொன்றுவிட்டதாக தேஜஸ்வினியின் பெற்றோர் புகார் அளித்துயுள்ளனர். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததால் போலிஸாரை கண்டித்து பெற்றோர்கள் மகளிர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடற்கூறாய்வு அறிக்கையின்படி வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் உறுதியளித்ததால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: