×

திருமணம் செய்ய வற்புறுத்தி நடிகை மஞ்சு வாரியரை தொடர்ந்து மிரட்டிய டைரக்டர்: பகீர் தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: டைரக்டர் சனல்குமார் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலும் அதற்கு மறுத்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சியதாலும் தான் அவர் மீது  நடிகை மஞ்சு வாரியர் புகார் கொடுத்தார் என்று பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர் இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். இந்நிலையில் நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் தலைமையில் சதித்திட்டம் நடந்ததாக டைரக்டர் பாலச்சந்திரகுமார் என்பவர் கூறினார். இது தொடர்பாகவும் மஞ்சு வாரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை மஞ்சு வாரியர் டைரக்டர் சனல்குமார் சசிதரனுக்கு எதிராக கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜுவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சனல்குமார் சசிதரனை கைது செய்தனர். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரை சிலர் சிறை வைத்துள்ளனர் என்றும் சனல்குமார் சசிதரன் கூறியது தான் அவரது கைதுக்கு காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது கைதுக்கு என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் மஞ்சு வாரியரை நாயகியாக வைத்து ‘கயற்றம்’ என்ற படத்தை சனல்குமார் சசிதரன் டைரக்ட் செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அவருக்கு சனல்குமார் காதல் வலை வீசியுள்ளார். அடிக்கடி மஞ்சு வாரியரின் செல்போனில் தன்னை திருமணம் செய்யுமாறு கூறி தகவலும் அனுப்பி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அனுப்பவில்லை. படப்பிடிப்பு முடிந்த பின்னரும் மஞ்சு வாரியரை சந்திக்க பலமுறை அவர் முயற்சித்துள்ளார். ஆனால் முடியாமல் போனதால் போனிலேயே மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் நடிகை மஞ்சு வாரியர் போலீசில் புகார் கொடுத்தார்.தன்னுடைய காதலை ஏற்காததால் தான் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை சிலர் சிறை வைத்துள்ளனர் என்றும் சனல்குமார் முகநூலில் குறிப்பிட்டார். இதற்கிடையே நேற்று பாறசாலையில் வைத்து சனல்குமாரை கைது செய்த போலீசார் இரவோடு இரவாக அவரை கொச்சிக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags : Manju Warrier ,Pakir , Manju Warrier's, director forced get married, information exposed
× RELATED இதயம் மகிழ்ச்சியில் துடிக்குது: அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினி