காஞ்சியில் வரும் 13, 20, 27 தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், தனியார் நிறுவனங்கள், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டு கம்பெனிக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த உள்ளனர். பிஇ, டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்கவேண்டும். எனவே, விருப்பமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Related Stories: