×

'விலங்குகளின் உறுப்புகளை பொருத்தினால் தொற்று நிச்சயம்': பன்றி இதயம் பொருத்தப்பட்டு இறந்தவர் இதயத்தில் புதிய வைரஸ்..அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்: பன்றி இதயம் பொருத்தப்பட்டு இறந்தவர் இதயத்தில் புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். அமெரிக்காவில் மேரிலாண்டை சேர்ந்த டேவிட் பென்னட், ஒழுங்கற்ற இதய துடிப்பு காரணமாக மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினர். மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டாலும், பன்றி இதயம் பொருத்தப்பட்ட பென்னட் இரண்டே மாதங்களில் உயிரிழந்துவிட்டார்.

இதை தொடர்ந்து டேவிட் பென்னட்டின் இதய பகுதியை மருத்துவ நிபுணர்கள் சோதனையிட்ட போது அசாதாரணமான கிருமி தொற்றை கண்டுபிடித்துள்ளார்கள். டேவிட் பென்னட்டிற்குள் இயங்கிய பன்றியின் இதயத்திற்குள் போர்சின் சைட்டோமெகலோ என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன் மூலமாக மனிதர்களுக்கு விலங்குகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டால் புதிய தொற்றுகள் உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.


Tags : US , Pig heart, dead, virus, American medical researchers
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!