புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 58 கைதிகள்

புழல்: புழல் மத்திய சிறையில் இன்று காலை 58 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் இன்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது. இதில் தண்டனை பிரிவை சேர்ந்த 39 பேர், விசாரணை பிரிவில் 11 பேர் பெண்கள் பிரிவில் 8 பேர் என மொத்தம் 58 பேர் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து கைதிகளும் வெற்றி பெற சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் வாழ்த்து தெரிவித்தார். சிறை வளாகத்தில் பொது தேர்வு நடைபெறுவதால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் நேற்று புழல் மத்திய சிறை வளாகத்தில் தண்டனை பிரிவில் 12 பேர், விசாரணை பிரிவில் ஒன்று, பெண்கள் பிரிவில் 4 பேர் என மொத்தம் 17 பேர் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியது என குறிப்பிடத்தக்கது.

Related Stories: