சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் பந்தல் திறப்பு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக  கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று (06.05.2022) காலை சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.கபில் குமார் சி சரத்கர், இ.கா.ப., அவர்கள் கோயம்பேடு, பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர்பந்தலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை துணிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு) திரு.ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப, போக்குவரத்து உதவி ஆணையாளர், ஆய்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: