மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டிற்கே தெரியும் : அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை

சென்னை: மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலா துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான ரீதியில் செய்து கொடுக்க வேண்டும்.

அமைச்சர் மதிவேந்தன்: மதுரை மாரியம்மன் தெப்பகுளத்தில் படகு சவாரி விடபட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சாத்தியகூறு இருக்கிறதா என பரிசீலிக்கப்படும்.

செல்லூர் ராஜூ: 20 லட்சம் மக்கள் வசிக்கும் மதுரையில் பொழுதுபோக்கு என எந்த இடமும் இல்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு: மதுரைக்கே சிறந்த பொழுது போக்கே அண்ணன் செல்லூர் ராஜூதான் அது நாட்டு மக்களுக்கே தெரியும். அமைச்சரின் இந்த பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories: