ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை: ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கவுள்ளது. தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலில் (06043) பயண முன்பதிவு மே 10-ல் தொடங்கவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொச்சுவேலி - தாம்பரம்  சிறப்பு ரயிலுக்கான (06044) முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. திருநெல்வேலி - மைசூரு சிறப்பு ரயிலுக்கான (06039) பயண முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: