உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக திறப்பு!: முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று சாமி தரிசனம்..!!

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடைகாலத்தில் திறக்கப்படுவது வழக்கம். இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளான 3ம் தேதி கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு சார்தாம் யாத்திரை தொடங்கியது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் முழக்கத்துக்கு இடையே இன்று காலை கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். கோயில் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை வரும் 8ம் தேதி திறக்கப்படவுள்ளது.

Related Stories: