×

இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 2 ஆக சரிவு... கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் பிறப்பு விகிதம் குறைவு என ஆய்வில் தகவல்!!

டெல்லி : இந்தியாவில் ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 2.2 என்ற எண்ணிக்கையில் இருந்து 2 ஆக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. முதுமை உள்ளிட்ட காரணங்களில் மரணமடைவோர் எண்ணிக்கையைவிட பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதாகவும் இந்தியாவில் மரணம் அடைவோர் எண்ணிக்கையை ஈடு செய்ய வேண்டுமானால் பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 2.1 ஆக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். 2.1க்கும் கீழ் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டால் நீண்ட கால நோக்கில் இந்தியாவின் மக்கள் தொகை குறையத் தொடர்ந்து என்றும் ஆய்வின் போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில்,சிக்கிமில் குழந்தை பிறப்பு விகிதம் 1.1 ஆகவும் பீகாரில் 3 ஆகவும் உள்ளது.

தென்னிந்தியா, மேற்கு மற்றும் வட இந்தியாவில் உள்ள 31 மாவட்டங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2.1க்கு கீழ் சென்றுவிட்டது. 1992-93ம் ஆண்டில் பெண் ஒருவருக்கு 3.7 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2019-2021ல் 2.1 ஆகசரிந்துவிட்டது. இந்திய கிராமப்புறங்களில் 1992-1993ல் 3.7 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2019-2021ல் 2.1ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய நகர்ப்புறங்களில் 1992-1993ல் 2.7 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2019-2021ல் 1.6 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களை விட  நகர்ப்புறங்களில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

திருமணமான 15ல் இருந்து 49 வயது பெண்களில் 23% பேர் தான் 2வது குழந்தை தேவை என்று கருதுகின்றனர்.
12 சதவீத பெண்கள் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், 10 சதவீதம் பேர் மற்றொரு குழந்தை பிறப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். நகர்ப்புறங்களில் 94% குழந்தைகளும் கிராமப்புறங்களில் 87% குழந்தைகளும் மருத்துவமனையில் பிறக்கின்றனர்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India , India, child, birth, rate
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!