×

கர்நாடகாவில் சூறைக்காற்றுடன் வீசிய பலத்த மழை: முற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை

பெங்களூரு: கர்நாடகாவில் பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்றில் மேசை, நாற்காலிகளுடன் சில மாணவர்களும் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹூப்ளி சுற்றுவட்டாரங்களில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. அப்போது சூறைக்காற்று அதிவேகமாக வீசியதால் நகரில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. மாற்றங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. ஹூப்ளி விமான நிலையத்தில் ஊழியர்களுக்காக உள்ள உணவகத்தின் வெளியே போடப்பட்டிருந்த மேசை, நாற்காலிகள் காற்றில் பறந்தன. வித்யா நகர் என்ற இடத்தில் மழை காரணமாக இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, மாணவர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்றில் இருசக்கர வாகனத்துடன் மாணவர்களும் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒருவரையொருவர் பிடித்தபடி அவர்கள் உயிர் தப்பினர். சூறைக்காற்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் உள்ள மரம் சாய்ந்து காவல்துறை ஜீப் மீது விழுந்து விட்டது. வித்யாநகரில் வேருடன் சாய்ந்த மரம் ஒன்று ஆட்டோ மீது விழுந்ததில், காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த மழையால் ஹூப்ளியின் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், நகரின் பல இடங்களில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.        


Tags : Karnataka , Karnataka, hurricane, rain, people, vulnerability
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...