தமிழகம் முழுவதும் 2வது நாளாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை... கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!!

சென்னை : கேரள மாநிலத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.ஷவர்மா முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் சில கடைகளில் கெட்டுப்போன பழைய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பல்வேறு கடைகளில் இருந்தும் 10 கிலோ அளவிற்கான அழுகிய கோழிக்கறி

யையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் இரவு துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷவர்மா சாப்பிட்ட பின்னர் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டு போன இறைச்சி உள்ளதா? என உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   ஆய்வு மேற்கொண்டதில் நாகையில் கெட்டுப்போன சிக்கன் எலும்பு துண்டுகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷேக்தாவூத் என்பவர் வீட்டில் 15 நாளாக வைக்கப்பட்டு இருந்த 250 கிலோ சிக்கன் எலும்பு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.சிக்கன் பக்கோடா மற்றும் சிக்கன் குருமா தயார் செய்ய ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது. நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட சிக்கன் எலும்பு துண்டுகளை நாகை ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். அதைப்போல, திருக்குவளையில் உள்ள ஷவர்மா கடையிலும் 60 கிலோ காலாவதியான சிக்கன் கறிகளை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதே போல ஈரோடு கொள்ளம் பாளையத்தில் இயங்கி வரும் பிரியாணி கடையில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.

Related Stories: