×

சென்னையில் விசாரணை கைதி மரணம்: 8 காவலர்களுக்கு சம்மன் அனுப்பியது சிபிசிஐடி

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக உதவி ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் விசாரணை கைதி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் விக்னேஷ், சொல்லு சுரேஷ் என்ற நபர்களை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் சிபிசிஐடி போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

விக்னேஷை கைது செய்தபோது உடனிருந்த காவலர்களான, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தீபக், மற்றொரு ஊர்காவல்படையை சேர்ந்த வீரர் 3 பேர் ஆகிய 8 பேரை நாளை மாலை 5 மணிக்குள் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பட்ட 8 பேரில் 3 பேரை தவிர 5 பேர் தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் என தெரியவந்துள்ளது. ஏற்கெனவே காவல் ஆய்வாளர் விசாரணைக்கு நேரில் ஆஜரான சூழலில், மேலும் நேரடியாக தொடர்புடைய 3 காவலர்கள் உட்பட 8 பேர் இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்ட சூழலில் நாளை மாலைக்குள் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்றைய தினமே காவலர்கள் 8 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.         


Tags : Chennai ,CPCIT ,Samman , Chennai, trial prisoner, death, 8 policemen, summoned, CPCIT
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...