×

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் வரலாறு!: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் பானைகளை தூண்களாக கொண்டு கட்டப்பட்ட நீளமான சுவர் கண்டெடுப்பு..!!

சிவகங்கை: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் பானைகளை தூண்களாக கொண்டு கட்டப்பட்ட நீளமான சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு நீள்வடிவ தாயக்கட்டை, பாசி, சுடுமண் காதணிகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கீழடியில் 5வதாக தோண்டப்பட்ட குழியில் சதுர வடிவிலான நீளமான சுவர் கண்டெடுக்கப்பட்டது. இந்த சுவரை 3 சுடுமண் பானைகள் தாங்கி நிற்கின்றன. ஒரே அளவிலான இந்த பானைகள், சுவர் உயரமாக கட்டுவதற்காக பயன்படுத்தி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதுவரை நடந்த அகழாய்வில் சுவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

முதன்முதலாக சுவர்களை தாங்குவதற்காக பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் 5 குழிகளும், கொந்தகை, அகரத்தில் தலா 2 குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை காண தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 2ம் ஆண்டு வேளாண்மை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் கண்டு வியப்படைந்தனர். புதுக்கோட்டையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக கீழடிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 40க்கும் மேற்பட்டோர் வருகை தந்து, அகழாய்வு தளத்தை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு தொல்லியல் அலுவலர் அஜய் விளக்கம் அளித்தார்.


Tags : Tamils , Bottom, 8th phase excavation, pot pillar, wall
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு