தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நிகழ்வு குறித்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார்.! அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: வரும் 22-ம் தேதி தான் தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நிகழ்வு குறித்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது; தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் விரைவில் சுமுகமான ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பார். ஆதிக்கர், நாத்திகர் என அனைவரது மனமும் குளிரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது, நியாயத்திற்குத்தான் பல்லக்கு தூக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். எனவே, எவ்வித பிரச்சனையின்றி பட்டினப்பிரவேசம் நடத்தும் வழிவகை குறித்து பேசி வருகிறோம் என தெரிவித்தார்.

Related Stories: